ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எ.ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர்களாக ஐடன் மார்க்ரம், இஷான் போரல், ஆதில் ரஷித் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் எவின் லூயிஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், இஷான் போரல், ஆதில் ரஷித், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லொம்ரர், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேத்தியா, முஸ்தாபிசூர் ரஹ்மான், கர்திக் தியாகி, சேத்தன் சகாரியா.