ஐபிஎல் 2021: பந்துவீச அதிக நேரம்; சாம்சனுக்கு அபராதம்!

IPL 2021: RR skipper Samson fined for slow over-rate
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
அதிலும் கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில், கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News