பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனில் உள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லாஹூரில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஆரோன் ஃபின்ச் (கே), பென் மெக்டெர்மொட், மார்னஸ் லாபுஷாக்னே, மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப்.
பாகிஸ்தான்: ஃபகார் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஆசிஃப் அலி, இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஜாஹித் மஹ்மூத்.