ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் அணியை எதிர்த்து முதல் வெற்றிக்காக போராடி வரும் டெல்லி அணி விளையாட உள்ளது. பஞ்சாப் அணியுடன் அடைந்த தோல்வியால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தானும், அடுத்தடுத்து இரு தோல்விகளை அடைந்ததால் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியும் இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கௌஹாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச தீர்மானித்து ராஜஸ்தான் ராயல்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, சர்ஃப்ராஸ் கான், ஆகியோருக்கு பதிலாக ரோவ்மன் பாவெல், லலித் யாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கே), மனிஷ் பாண்டே, ரிலீ ரூஸோவ், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (வ), அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.