ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து எஸ்ஆர்எச் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News