
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான ஆர்சிபி அணியில் புவனேஷ்வர் குமாரும், சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பதிரானாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
இம்பேக்ட் வீரர்கள் - சுயாஷ் சர்மா, ராசிக் தார் சலாம், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், மனோஜ் பண்டேஜ்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரானா, கலீல் அகமது.
இம்பேக்ட் வீரர்கள் - ஷிவம் துபே, கமலேஷ் நாகர்கோட்டி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷீத்