
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணி தரப்பில் எந்த மற்றமும் இல்லை. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்: ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல்(கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
இம்பாக்ட் வீரர்கள்: தர்ஷன் நல்கண்டே, கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா, துஷ்மந்த சமீரா
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இம்பாக்ட் வீரர்கள்: கார்பின் போஷ், ராபின் மின்ஸ், அஸ்வனி குமார், ராஜ் பாவா, கர்ண் சர்மா