
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அடுத்தடுத்த தோல்விக்களுக்கு பிறகும், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி
இம்பேக்ட் வீரர்கள் - அபினவ் மனோகர், சச்சின் பேபி, சிமர்ஜித் சிங், ராகுல் சாஹர், வியான் முல்டர்
குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
இம்பேக்ட் வீரர்கள் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்