
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னோஷ் புதூர் மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணியில் சுனில் நரைன் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் பிளேயர் - ரோஹித் சர்மா, கார்பின் போஷ், ராஜ் பாவா, ராபின் மிங்ஸ், சத்யநாராயண ராஜு
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புதூர்
இம்பேக்ட் பிளேயர் - அன்ரிச் நோர்ட்ஜே, அமித் ராய், மனிஷ் பாண்டே, வைபவ் அரோரா, லவ்னீத் சிசோடியா