
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வநிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ஃபசல்ஹக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
இம்பாக்ட் வீரர்கள்: வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே
இம்பாக்ட் வீரர்கள்: குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்