ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோரை ஏலம் எடுக்க சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.3 கோடிக்கு சாய் கிஷோரை ஏலத்தில் எடுத்தது.
1) நூர் அகமது - குஜராத் டைட்டன்ஸ், 30 லட்சம் ரூபாய்
2) முருகன் அஸ்வின் - மும்பை இந்தியன்ஸ், 1.60 கோடி ரூபாய்
3) கே.சி கரியப்பா - ராஜஸ்தான் ராயல்ஸ், 30 லட்சம் ரூபாய்
4) ஷ்ரேயாஸ் கோபால் - ராஜஸ்தான் ராயல்ஸ், 75 லட்சம் ரூபாய்
5) சந்தீப் லமிச்சனே - ஏலம் எடுக்கப்படவில்லை
6) R. சாய் கிஷோர் - குஜராத் டைட்டன்ஸ், 3 கோடி ரூபாய்
7) M. சித்தார்த் - ஏலம் எடுக்கப்படவில்லை
8) ஜெகதீஷா சுசித் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 லட்சம் ரூபாய்