ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கபட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.
1) கேஎம் ஆசிஃப் - சென்னை சூப்பர் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்
2) ஆகாஷ் தீப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 20 லட்சம் ரூபாய்
3) துஷார் தேஷ்பாண்டே - சென்னை சூப்பர் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்
4) அவேஷ் கான் - லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ், 10 கோடி ரூபாய்
5) இஷான் போரல் - பஞ்சாப் கிங்ஸ், 25 லட்சம் ரூபாய்
6) அங்கித் சிங் ராஜ்பூட் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 50 லட்சம் ரூபாய்
7) பசில் தம்பி - மும்பை இந்தியன்ஸ், 30 லட்சம் ரூபாய்
8) கார்த்திக் தியாகி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4 கோடி ரூபாய்