பட்லரின் ஒப்பந்தத்தை நீட்டித்த லங்காஷையர்!

Jos Buttler signs three-year contract extension with Lancashire
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் லங்காஷையர் அணிக்காக விளையாட ஜாஸ் பட்லரின் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
லங்காஷையர் அணிக்காக 9 வருடங்களாக விளையாடி வரும் ஜோஸ் பட்லரை 2025 சீசன் முடியும் வரை அந்த அணி தக்கவைத்துள்ளது.
இது குறித்து பேசிய பட்லர், "நான் 2013 இல் சோமர்செட் அணியிலிருந்து விலகிய போது, எனது லட்சியங்களை அடைய எனக்கு வாய்ப்பளித்த கிளப்பான லங்காஷையருக்கு எனது கவுண்டி கிரிக்கெட் எதிர்காலத்தை அர்ப்பணிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கூறினார்.
பட்லர் இதுவரை லங்காஷையர் அணிக்காக பல்வேறு வடிவங்களில் ஒன்பது சீசன்களில் 61 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News