டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 8ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மேன் பவல், ஜான்சன் சார்லஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், ஓபேத் மெக்காய்.
ஜிம்பாப்வே: ரெஜிஸ் சாகப்வா(கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்காரவா, பிளஸ்ஸிங் முசரபானி.