இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இத்தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியும் ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி இத்தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.