மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!

மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி 309 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், லபுஷேன் 62 ரன்களும் விளாசினர். நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News