ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். 1996ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தார்.
அதுநாள் வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் 6,7ஆவது வரிசையில் களமிறங்கிய நிலையில், தொடக்க வீரராகவும் களமிறங்கி அசத்த முடியும் என சர்வதேச கிரிக்கெட்டை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றவர்.
ஆஸ்திரேலிய அணிக்காக கில்கிறிஸ்ட் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,570 ரன்களையும், 287 ஒருநாள் போட்டிகளில் 9619 ரன்களையும், 13 டி20 போட்டிகளில் விளையாடி 278 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பிங் முறையில் 924 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
இதையடுத்து இவர் தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி உங்களுக்காக இதோ..!