பந்துவீச்சில் பவுன்சர், யார்க்கர், ஸ்லோயர் பால் என வெரைட்டியாக 90ஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். விவயன் ரிச்சர்ட்ஸால் அறியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 1990ன் பிற்பாதியில் கர்ட்லி அம்ப்ரோஸால் அறியப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த கர்ட்லி அம்ப்ரோஸை கண்டாலே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிறு பயம் ஏற்படும். அதிலும் 6.7 அங்குலம் உயரம் கொண்ட இவர் வீசும் பவுன்சர் பந்துகள் பலரது காயத்திற்கு வழிவகுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1988ஆம் ஆண்டு அறிமுகமான கர்ட்லி அம்ப்ரோஸ் இதுவரை 98 டெஸ்ட், 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய் 630 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் கர்ட்லி அம்ப்ரோஸ் தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள யூடியூப் காணொளி இதோ..!