ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் :‘மகளிர் கிரிக்கெட்டின் அடையாளம்’ ரேச்சல் ஹேஹோ-பிளின்ட்!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரேச்சல் ஹேஹோ -பிளின்ட். 1960ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து மகளிர் அணியின் மிகச் சிறந்த வீராங்கனையாக விளங்கிய இவர், 22 டெஸ்ட், 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
மேலும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் சிக்சரைப் பறக்க விட்ட வீராங்கனையும் இவரே. இவர் கிரிக்கெட் மட்டுமின்றி இங்கிலாந்து ஹாக்கி அணியின் கோல் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து சார்பில் கோல்ஃப், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த ரேச்சல் ஹேஹோ-பிளின்ட், தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட யூடியூப் காணொளி உங்களுக்காக...!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News