ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் (Sir Donald George “Don” Bradman). கிரிக்கெட்டின் ‘டான்’ என்று அழைக்கப்பட்ட பிராட்மேன், பேட்ஸ்மேனாக களமிறங்கி பல்வேறு சாதனைகளை புரிந்து வியக்க வைத்துள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவரது சாதனைகள் இன்றுவரை முறியடிக்க படாமலும் உள்ளன என்பது மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்காக 1928 முதல் 1948ஆம் ஆண்டு வரை விளையாடிய பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதம் (13 இரட்டை சதங்கள் உள்பட) 6,996 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவரது சராசரி 99.9 ஆகும். இதுநாள் வரை எந்த ஒரு வீரரும் இவ்வளவு சராசரியை பெற்றதில்லை.
இப்படி சர்வதேச கிரிக்கெட்டின் சாதனை நாயகனாக இருக்கும் சர் டொனால்ட் ஜார்ஜ் ‘டான்’ பிராட்மேன் ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசியின் யூடியூப் காணொளி உங்களுக்காக..!