ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வென்று சாதனை பட்டைத்தது.
மேலும் 1997ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ள ஸ்டீவ் வாக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் எனும் சதானையை படைத்துள்ளார்.
ஆல்ரவுண்டரான ஸ்டீவ் வாக் 1985ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட், 325 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,927 ரன்களையும் 92 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7,569 ரன்களையும், 195 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் வாக் தற்போது ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட யூடியூப் காணொளி இதோ..!