ரவீந்திர ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை…
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகமடைய செய்தனர்.