வார்னர் - மைக்கேல் ஸ்லாட்டர் இடையே மோதலா? விளக்குமளித்த வார்னர்!

'Nothing Happened': Warner, Slater Deny Drunken Bar Brawl In Maldives
கரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.
இந்த நிலையில், மாலத்தீவில் உள்ள பார் ஒன்றில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னணி வீரரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான டேவிட் வார்னர் , ஆஸ்திரேலியவின் வர்ணணையாளர் மைக்கேல் ஸ்லாட்டர் இடையே மோதல் நடைபெற்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியானது. இருவரும் கைகலைப்பிலும் ஈடுபட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை சம்பந்தப்பட்ட இருவருமே மறுத்துள்ளனர். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் எனவே அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என இருவருமே மறுப்பு தெரிவித்ததுள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News