
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளத்ஜு.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று சரிவிலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் அகா(கேப்டன்), இர்ஃபான் கான், குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்துல் சமத், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப்
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹேய், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, பென் சியர்ஸ்