கடந்த 2002ஆம் இதே நாளில் (ஜூலை 13) ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நெட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நேசர் ஹுசைன் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி மார்கஸ் ட்ரெஸ்கோதிக், நெசர் ஹுசைனின் அதிரடி சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களை குவித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய கங்குலி தலைமையிலான இந்திய அணி யுவராஜ் சிங், முகமது கைஃப் ஆகியோரது அசத்தலான பேட்டிங்கினால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி, கோப்பையைத் தட்டி சென்றது.
மேலும் அப்போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த முகமது கைஃப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா - இங்கிலாந்து நெட்வெஸ்ட் தொடர் இறுதி போட்டியின் ஹைலைட்ஸ்..!