பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் காம்ரூன் கிரீன், பென் துவர்ஷியஸ்,மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா : ஆரோன் ஃபிஞ்ச்(கே), டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் கிரீன், சீன் அபோட், பென் துவர்ஷியஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஜமான், ஆசிஃப் அலி, இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது வாசிம் ஜூனியர், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், உஸ்மான் காதிர்