பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, அஷார் அலி, ஹாரிஸ் ராவூஃப் ஆகியோருக்கு பதிலாக முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சவுத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஜாஹித் மஹ்மூத், முகமது அலி, அப்ரார் அகமது
இங்கிலாந்து: சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கே), வில் ஜாக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.