இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியிலிருந்து ஹசன் அலி விலகல்!

Pakistan's Hasan Ali Out Of England T20 Opener
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார்.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காயத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போட்டியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News