ஹைலைட்ஸ்: சர்ரே அணிக்காக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்

Ravichandran Ashwin Warms Up For England Tests With 6-Wkt Haul In County Match
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதில் சர்ரே அணியில் இடம்பெற்ற அஸ்வின், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சோமர்செட் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார்.
இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் அற்புதமாகப் பந்துவீசிய அஸ்வின் சோமர்செட் அணியை 69 ரன்களுக்குள் சுருட்டினார். இதில் 17 ஓவர்களை மட்டுமே வீசியிருந்த அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சர்ரே அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் - ஹைலைட்ஸ் காணொளி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News