தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் பேட்ரீக் க்ரூகர் வெளியேற்றப்பட்டு ரீஸா வென்று தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இத்தொடரில் ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ள இந்திய அணி இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்றும், அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ராம்(கே), ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், நகாபயோம்சி பீட்டர்
இந்தியா பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.