நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மழை காரணமாக தமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், இப்போட்டியில் வென்றால் மட்டும் தொடரை இழக்கமால் சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டிம் ராபின்சன், வில் யங், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்ச் ஹே, ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர் (கே), இஷ் சோதி, ஸகாரி ஃபௌல்க்ஸ், லாக்கி பெர்குசன்
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா, நுவான் துஷாரா.