எஸ்ஏ20 2024: டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே டர்பன் அணி இத்தொடரில் அடுத்தடுத்து…
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே டர்பன் அணி இத்தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருவதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் டர்பன் அணி தங்களது வெற்றியை தொடரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: பிலிப் சால்ட், வில் ஜேக்ஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸோவ், காலின் இங்க்ராம், காலின் அக்கர்மேன், செனுரன் முத்துசாமி, ஈதன் போஷ், வெய்ன் பார்னல்(கே), ஆதில் ரஷித், டேரின் டுபாவில்லன்
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: டோனி டி ஸோர்ஸி, மேத்யூ பிரீட்ஸ்கி, குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், கீமோ பால், கேசவ் மகாராஜ்(கே), ஜூனியர் தாலா, நவீன்-உல்-ஹக், நூர் அஹ்மத்.