தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் ஓட்னீல் பார்ட்மேனுக்கு பதிலாக ஆண்டிலே சிமலனே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் எம்ஐ கேப்டவுன் அணியில் செதிகுல்லா அடல் நீக்கப்பட்டு கானர் எஸ்டெர்ஹுய்சென் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இந்த இறுதிப்போட்டியில் கேப்டவுன் அணி ஆதிக்கத்தை செலுத்தில் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது சன்ரைசர்ஸ் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுப்பதுடன் ஹாட்ரிக் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Sunrisers Eastern Cape Playing XI : டேவிட் பெடிங்ஹாம், டோனி டி ஸோர்ஸி, ஜோர்டான் ஹர்மன், டாம் அபெல், ஐடன் மார்க்ராம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கிரெய்க் ஓவர்டன், லியாம் டௌசன், ஆண்டிலே சிமலனே, ரிச்சர்ட் க்ளீசன்.
Mi Cape Town Playing XI: ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான்டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கானர் எஸ்டெர்ஹுய்சென், டெவால்ட் பிரீவிஸ், டெலானோ போட்ஜிட்டர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ரஷித் கான்(கே), காகிசோ ரபாடா, டிரெண்ட் போல்ட்