தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் லுதோ சிபம்லா, ஹார்டுஸ் வில்ஜோன், சிபோனெலோ மக்கன்யா உள்ளிட்டோருக்கு பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் மறுபக்கம் பார்ல் ராயல்ஸ் அணியில் லுங்கி இங்கிடி, ஈஷான் மலிங்கா ஆகியோருக்கு பதிலாக துனித் வெல்லாலகே, பிஜோர்ன் ஃபோர்டுயின் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவான் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), லியூஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, டோனோவன் ஃபெரீரா, சிபோனெலோ மகன்யா, தப்ரைஸ் ஷம்சி, இம்ரான் தாஹிர், லூதோ சிபம்லா மற்றும் ஹார்டஸ் வில்ஜோன்.
பார்ல் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், ரூபின் ஹெர்மன், டேவிட் மில்லர் (கேப்டன்), மிட்செல் வான் புரன், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), தயான் கலீம், முஜீப் உர் ரஹ்மான், பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லலேஜ், க்வேனா மபாகா.