ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Scotland vs Australia 3rd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. அதேசமயம் தோல்வியில் இருந்து மீளும் முயற்சியில் ஸ்காட்லாந்து அணியும் செயல்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News