SL vs AFG, Asia Cup 2023: டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங் தேர்வு!

SL vs AFG, Asia Cup 2023: டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News