எட்டாவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட்.
இலங்கை: சாமரி அதபத்து(கே), அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷிதா மாதவி, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, மல்ஷா ஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய.