மகளிர் டி20 தரவரிசை: ஸ்மிருதி மந்தனா அசத்தல்!

Smriti Mandhana Advances In T20I Rankings With Career Best 3rd Spot
மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மெல் லானிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன் எடுத்ததால் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 5ம் இடத்தில் உள்ளார்.
டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 5ஆவது இடத்தில் உள்ளார். இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 5ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News