இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். இன்றையப் போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), ஷிம்ரோன் ஹெட்மியர், டெவோன் தாமஸ், ரோவ்மேன் பவல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.