திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3,194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். கடந்த் 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு…
இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3,194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். கடந்த் 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.