ஓமனில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இந்தியாவில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் சூப்பர் 12 சுற்றில் தகுதி பெறாத இலங்கை அணியும் தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதைத்தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி ஓமன் செல்லவுள்ள இலங்கை அணி…
இந்தியாவில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் சூப்பர் 12 சுற்றில் தகுதி பெறாத இலங்கை அணியும் தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதைத்தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி ஓமன் செல்லவுள்ள இலங்கை அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு டி20 போட்டிகளில் ஓமன் அணியுடன் விளையாடவுள்ளது. இது உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டமாக கணக்கில் கொள்ளப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 12ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 14ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.