டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1இல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.
அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இங்கிலாந்து : ஜோஸ் பட்லர்(கே), அலெக்ஸ் ஹேல்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, கசுன் ராஜித.