டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 6 ரன்களுக்கும், ஜஃபர் ஜமால் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மணி பாரதி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும் மறுபக்கம் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் ரோகின்ஸ் 16, அந்தோனி தாஸ் 12, ஃபெரேரியோ 29 என்களில் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மணி பாரதியும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகளையும், சன்னி சந்து, கார்த்திகேயன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.