TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அபார வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் தொடக்க வீரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் - ஷ்யாம்…
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் தொடக்க வீரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் - ஷ்யாம் சுந்தர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.