‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களையில் சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!

‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களையில் சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் ரஹ்மனுல்லார் குர்பாஸ் 43 ரன்களைச் சேர்த்தாலும் அதனை அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார். மேற்கொண்டு விளையாடிய வீரர்களில் ரஷித் கானைத் தவிர்த்த மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News