மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

மகளிர் ஆசிய கோப்பை 2024: நேபாளை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நெபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். மேற்கொண்டு சஜீவன் சஞ்சனா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News