ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கிரேஸ் ஹேரிஸ் மற்றும் டார்சி பிரௌன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியில் பூஜா வஸ்திரேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலிய மகளிர் அணி: பெத் மூனி, கிரேஸ் ஹாரிஸ், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்கே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத்(கே), ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டார்சி பிரவுன்
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்