ஹைலைட்ஸ் காணொளி: நூழிலையில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி!
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹா்மன்பிரீத் கவுர் 4 ரன்களுடனும், தீப்தி சா்மா ரன் ஏதுமின்றியும் களத்தில்…
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹா்மன்பிரீத் கவுர் 4 ரன்களுடனும், தீப்தி சா்மா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனா்.
இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீராங்கனை ஷஃபாலி வர்மா 13 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 78 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஹீதா் நைட் 2, கேட் கிராஸ், நடாலி ஸ்கீவா், சோஃபி தலா ஒரு விக்கெட் சாய்த்தனா்.
இப்போட்டியின் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ் காணொளி இதோ..!