
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
அந்தவகையில் மூன்றாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இப்போட்டிக்கான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஐந்து அறிமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சில அறிமுக வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வையட்-ஹாட்ஜ், எல்லிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், பிரேமா ராவத், ஜோஷிதா வி.ஜே, ரேணுகா தாக்கூர் சிங்
குஜராத் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: லாரா வோல்வார்ட், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஆஷ்லே கார்ட்னர்(கேப்டன்), டியாண்ட்ரா டோட்டின், ஹர்லீன் தியோல், சிம்ரன் ஷேக், தனுஜா கன்வர், சயாலி சத்காரே, பிரியா மிஸ்ரா, காஷ்வீ கௌதம்.