Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு…
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.